குல்பி சாப்பிட்ட சோழர்கள்... என்ன நடக்குது டெல்லியில் ?

ps2

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ப்ரோமோஷனுக்காக டெல்லி சென்ற படக்குழுவினர் குல்பி சாப்பிட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

ps2

இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமாக உருவாகி வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய இந்த நாவல் ‘பொன்னியின் செல்வன்’ என்ற பெயரிலேயே இருபாகங்களாக உருவாகியுள்ளது. லைக்கா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

ps2

இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி சமீபத்தில் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தை ப்ரோமோஷன் செய்யும் பணிகளில் படக்குழுவினர் ஈடுப்பட்டுள்ளனர். 

ps2

ஏற்கனவே சென்னை, கோவை உள்ளிட்ட தமிழக நகரங்களில் ரசிகர்களை பொன்னியின் செல்வன் குழுவினர் சந்தித்து படத்தின் அனுபவங்களை பகிர்ந்தனர். இந்நிலையில் டெல்லிக்கு ப்ரோமோஷனுக்காக பொன்னியின் செல்வன் படக்குழுவினரான விக்ரம், கார்த்தி, திரிஷா, ஜெயம் ரவி உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.  அங்கு கடை ஒன்றிற்கு சென்ற படக்குழுவினர் வெளியில் நின்று குல்பி சாப்பிடும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் கார்த்தியும், ஐஸ்வர்ய லஷ்மியும் சோழர்கள் போன்று குல்பியில் சண்டைப்போடுவது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

ps2

Share this story