ஏ.ஆர்.ரகுமான் பாடிய ‘பொன்னியின் செல்வன் Anthem’... சோழர்களின் பெருமை பேசும் வீடியோ பாடல் !

ps anthem

 பொன்னியின் செல்வன் 2 படத்தில் ஏ.ஆர்.ரகுமான் பாடிய ‘PS anthem‘ வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 

புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவல் இரண்டு பாகங்களாக திரைப்படமாக உருவாகியுள்ளது. மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. 

ps anthem

இதையடுத்து இரண்டாவது தற்போது உருவாகி வெளிவர காத்திருக்கிறது. வரும் ஏப்ரல் 28-ஆம் வெளியாகவுள்ள இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. 

ps anthem

இந்நிலையில் சோழர்களின் பழம்பெருமைகளை பேசும் ‘PS anthem‘ வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரகுமான், பாடகர் நபிலா மானுடன் இணைந்து பாடியும் நடித்துள்ளார். இந்த பாடலில் சோழர்களின் எழுச்சி உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக கூறப்பட்டுள்ளது. இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

 

Share this story