‘பொன்னியின் செல்வன் 2’ ரிலீஸ் தள்ளிப்போகிறதா ?... தீயாய் பரவும் தகவல் !

ponniyin selvan 2

‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளதாக வந்த தகவலுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

நீண்ட நாட்களாக பலரது கனவு திரைப்படமாக இருந்த பொன்னியின் செல்வன் நாவல் இயக்குனர் மணிரத்னம் மூலம் திரைப்படமாக மாறியது. கல்கி எழுதிய சுவாரஸ்சியமான நாவலை போன்று திரைப்படத்தையும் எடுத்து மணிரத்னம் சாதனை படைத்துள்ளார். லைக்கா தயாரிப்பில் இரு பாகங்களாக திட்டமிடப்பட்ட இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டரில் வெளியானது.  

ponniyin selvan 2

இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பிரம்மாண்டமாக உருவான இந்த படம் இந்தியாவில் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படம் சுமார் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.  முதல் பாகத்தில் அருள்மொழி தேவனை ஊமை ராணி காப்பாற்றுவது போல க்ளைமேக்ஸ் இருந்தது. இரண்டாம் பாகத்தில் ஊமை ராணியின் விரிவாக பகுதியை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். 

ponniyin selvan 2

இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்திற்கான இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதம் இரண்டாம் பாகத்திற்கான சில படப்பிடிப்புகளை மணிரத்னம் நடத்தினார். இந்நிலையில் ‘பொன்னியின் செல்வன் 2’ படம் அறிவிக்கப்பட்ட தேதியில் வெளியாகாது என்று தகவல் பரவியது. இதற்கு விளக்கமளித்துள்ள படக்குழு, சமூக வலைத்தளத்தில் வெளியான தகவல் வெறும் வதந்தியே என்றும், திட்டமிட்டப்படி படம் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளது. 

 

Share this story