"சோழன் மீண்டும் வருகிறான்'' - சுபாஸ்கரண் பிறந்தநாளில் வெளியான போஸ்டர் !

ps 2

லைக்கா உரிமையாளர் சுபாஷ் கரண் பிறந்தநாளையொட்டி 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

 மணிரத்னத்தின் இயக்கத்தில் இரு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. லைக்கா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி என இந்தியாவின் ஐந்து மொழிகளில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, சரத்குமார், பிரகாஷ் ராஜ்  என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, சரத்குமார், பிரகாஷ் ராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 'பொன்னியின் செல்வன்' நாவலில் இடம்பெற்றிருந்த கதாபாத்திரங்களை தத்துரூபமாக காட்டியிருந்தார் மணிரத்னம். இந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இரண்டாம் பாகம் ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் அறிவிக்கப்பட்ட தேதியில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகாது என தகவல் பரவியது.  இந்த தகவலை பொய்யாக்கும் விதமாக நேற்று 'பொன்னியின் செல்வன் 2' படம் வெளியாவது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ் கரண் பிறந்தநாளையொட்டி 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் அருள்மொழி வர்மனாக நடிக்கும் ஜெயம் ரவி கம்பீரமாக இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அதோடு சோழன் மீண்டும் வருகிறான் என்று குறிப்பிட்டுள்ளது. 

Share this story