அட்டகாசமாக வெளியாகும் ‘பொன்னியின் செல்வன் 2’ டிரெய்லர்.. முக்கிய அறிவிப்பு !

ps1

‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் டிரெய்லர் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மணிரத்னத்தின் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியானது. இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, சரத்குமார், பார்த்திபன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 

ps1

முதல் பாகம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக சில கிளிம்ப்ஸ் வீடியோக்களையும் படக்குழு வெளியிட்டு வருகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வரும் மார்ச் 29-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ள விக்ரம் மற்றும் நந்தினியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராயின் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. 

Share this story