‘பொன்னியின் செல்வன் 2’ டிரெய்லர் எப்போது ?.. கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு !

ponniyin selvan 2

‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் டிரெய்லர் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மணிரத்னத்தின் பிரம்மாண்டமாக படைப்பாக உருவாகியுள்ளது ‘பொன்னியின் செல்வன்’. இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என இந்தியாவின் 5 மொழிகளில் இப்படம் வெளியாகவிருக்கிறது. 

ponniyin selvan 2

இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். லைக்கா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து நடித்துள்ள இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் தற்போது ப்ரோமோஷன் பணிகள் தொடங்கியுள்ளது. 

ponniyin selvan 2

ஏற்கனவே கிளிம்ப்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வரும் படக்குழு, தற்போது ஆதித்ய கரிகால சோழனாக நடிக்கும் விக்ரம் கதாபாத்திரத்தின் உடை எப்படி தயாரானது என்பது குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதோடு விரைவில் டிரெய்லர் வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.  

Share this story