அரசியல் எண்ணம் உள்ளதா ? - நடிகை திரிஷா பளீர் !

ps2

 அரசியலுக்கு வருவதாக வெளியான தகவல்களுக்கு நடிகை திரிஷா பதிலளித்துள்ளார். 

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி உலக முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் இந்த படத்தின் படக்குழுவினர்  செய்தியாளர்களை சந்தித்தனர்.

ps2 

இந்த நிகழ்வில் இயக்குனர் மணிரத்னம், நடிகர் விக்ரம், திரிஷா, கார்த்தி, ஜெயம் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். அப்போது ஒவ்வொரு வரும் படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பேசிய திரிஷா, அனைவருக்கும் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கார்த்தி சொன்னது போல், உலகம் முழுவதும் ‘பொன்னியின் செல்வன்’ படம் சென்றடைய மணி சார்தான் காரணம்.

பல ஆண்டுகளாக குந்தவைக்கு என்று முகம் கிடையாது. ஆனால் தற்போது குந்தவைக்கு என்று ஒரு முகம் உள்ளது. இதற்கு காரணமான இயக்குனர் மணிரத்தினத்திற்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். மேலும் பேசிய அவர், அரசியலுக்கு வரும் எண்ணம் துளியும் எனக்கு இல்லை என்று கூறினார். 

 

 

 

Share this story