வெளியானது ‘பொன்னியின் செல்வன் 2’... மணிரத்னத்தின் மாயஜாலம் பலித்துள்ளதா ?... ட்விட்டர் விமர்சனம் !

ps2

‘பொன்னியின் செல்வன் 2’ படம் குறித்து ட்விட்டரில் வைக்கப்பட்டுள்ள விமர்சனங்களை பார்க்கலாம். 

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமும் இன்று வெளியாகியுள்ளது. மணிரத்னத்தின் கனவு திரைப்படமாக உருவாகி இந்த படத்தை இன்று திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

இந்நிலையில் முதல் பாகத்தை போன்று இரண்டாவது பாகமும் வெற்றியை ருசித்துள்ளதா என்பதை ட்விட்டர் விமர்சனம் மூலம் பார்க்கலாம். 

இந்த படத்தில் சிறந்த திரைக்கதையை மணிரத்னம் அமைத்துள்ளார். விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் இடம்பெற்றுள்ள காட்சிகள் அருமையாக உள்ளது. இரண்டாம் பாகத்திலும் கார்த்தி ஜொலித்துள்ளார். திரிஷா மற்றும் ஜெயம் ரவி நன்றாக நடித்துள்ளனர். இசை, ஒளிப்பதிவு ஆகியவை நன்றாக அமைந்துள்ளது. 

 

 இவ்வளவு பிரம்மாண்டமானதாக, புத்திசாலித்தனமான திரைப்படத்தை கொண்டு வந்த மணிரத்னம் மிகுந்த மரியாதைக்கு உரியவர். கதைக்களம், கதாபாத்திரங்கள், காட்சிகள், வசனங்கள், மற்றும் இசை ஆகியவை அற்புதமாக உள்ளது. விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷாவின் காட்சிகள் மனதை கொள்ளைக் கொண்டுள்ளன. 


 

 ஓபனிங் 15 காட்சி மிரட்டலாக உள்ளது. நந்தினி  மற்றும் கரிகாலன் காட்சி படத்தின் ஐலைட். விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவியின் காட்சி சிறப்பாக உள்ளது. படத்துடன் இசை நன்றாக கலந்திருக்கிறது. அருமையான கலை படைப்பு. இடைவெளி இல்லாதது சிறந்த படைப்பாக உள்ளது. 


காட்சிகள் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. நல்ல தொடக்கம். பின்னணி இசை சிறப்பாக அமைந்துள்ளது. முதல் பாகத்தை போன்று இல்லாமல் கொஞ்சம் இடையில் தொய்வு உள்ளது. திரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி ஆகியவை சிறப்பாக நடித்துள்ளனர். 


 

Share this story