வசூலில் சாதனை படைக்கும் 'பொன்னியின் செல்வன் 2'... இரண்டு வசூல் எவ்வளவு தெரியுமா ?

ps2

 பொன்னியின் செல்வன் 2 படத்தின் இரண்டு நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

மணிரத்னத்தின் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியானது. இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, சரத்குமார், பார்த்திபன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 

ps2

ஏ.ஆர்.ரகுமான் இசையில் இப்படத்தின் பாடல்கள் உருவாகி உள்ளது. முதல் பாகம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் வரும் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியானது.  முதல் பாகத்தை விட மிகப்பெரிய ஓபனிங் இரண்டாவது கிடைத்துள்ளது. பொன்னியின் செல்வன் புத்தகத்தில் இல்லாத சில விஷயங்கள் மணிரத்தினம் இந்த படத்தில் காட்டியுள்ளார். 

உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பொன்னியின் செல்வன் 2 பெற்றுள்ளது. திரையரங்குகளில் குடும்பம் குடும்பமாய் சென்று படத்தை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படம் வெளியாகி இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. விரைவில் ஆயிரம் கோடி வசூலையும் இப்படம் குவிக்கும் என்று கூறப்படுகிறது. 

Share this story