PS2 படத்தை மணிரத்னத்துடன் சேர்ந்து பார்த்த உலகநாயகன்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்களேன் !

ps2

‘பொன்னியின் செல்வன் 2’ படத்தை இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து நடிகர் கமலஹாசன் பார்த்துள்ளார். 

மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. பல ஜாம்பவான்கள் முயற்சித்த இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் வெற்றிகரமாக எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ps 2

கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வெளியாகி நான்கு நாட்கள் ஆன நிலையில் 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.‌ இந்த படத்தின் ஓபனிங் காட்சிக்கு உலகநாயகன் கமலஹாசன் குரல் கொடுத்திருக்கிறார்.‌

ps 2

இந்நிலையில் 'பொன்னியின் செல்வன் 2' படத்தை நடிகர் கமல்ஹாசன் பிரத்யேக திரையரங்கு ஒன்றில் பார்த்தார்.‌ கமலுடன் இணைந்து இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோரும் படம் பார்த்தனர். பொன்னியன் செல்வன் படத்தை பார்த்த பிறகு நடிகர் கமலஹாசன் பேசிய போது, மணிரத்தினம் போன்று இந்தப் படத்தை யாராலும் சிறப்பாக எடுத்திருக்க முடியாது. 

ps 2

பன்முக திறமை கொண்ட மணிரத்னம் தமிழ் சினிமாவை சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்றுள்ளார். தமிழ் சினிமா பொற்காலத்தை நோக்கி இந்த படத்தில் மூலம் தெரிகிறது. இது ஒரு நல்ல தொடக்கமாகவே கருதுகிறேன் என்று கூறினார்.

Share this story