‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு எதிரான வழக்கு.. அதிரடி தீர்ப்பு கொடுத்த நீதிமன்றம் !

ps2

’பொன்னியின் செல்வன்’ படத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 

மணிரத்னத்தின் பிரம்மாண்ட படைப்பாக வெளியாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. அமரர் கல்கியின் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. முதல் பாகம் வெளியான நிலையில் இரண்டாம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. 

ps2

இந்நிலையில் வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் நாவல் எடுக்கப்பட்டுள்ள இயக்குனர் மணிரத்னம் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில் பொன்னியின் செல்வன் நாவலின் முக்கிய கதாபாத்திரமான வந்தியதேவனின் கதாபாத்திரத்தை தவறான காட்டப்பட்டுள்ளதாகவும், வரலாற்றை திரித்து மணிரத்னம் படம் உருவாக்கியுள்ளதாகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

ps2

இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இரு தரப்பு வாதங்களையும் கேட்டார். அப்போது இடைமறித்த நீதிபதி, கல்கியின் நாவலை படிக்காத மனுதாரர், வரலாற்றை திரித்துள்ளதாக எப்படி கூறமுடியும் என கூறி, வழக்கை தள்ளுபடி செய்தார்.  இதனால் படக்குழுவினர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். 

 

 

Share this story