‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வரலாறு திரிக்கப்பட்டுள்ளது - மணிரத்னத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு !

ps1

வரலாற்றை திரித்து ‘பொன்னியின் செல்வன்’ படம் எடுக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

மொழிகளை கடந்து ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. வரலாற்று நாவலான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை பிரம்மாண்ட திரைப்படமாக உருவாக்கியுள்ளார் மணிரத்னம். இரு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இதையடுத்து இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவிருகிறது. 

ps1

இந்நிலையில் சென்னை அண்ணா நகரை சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். அதில் அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அதே பெயரில் இயக்குனர் மணிரத்னம் எடுத்துள்ளார். இந்த நாவலின் முக்கிய கதாபாத்திரமான வந்தியத்தேவன் பெயரை தவறாக பயன்படுத்தியுள்ளார். அதோடு தனது சுய லாபத்திற்காக வரலாற்றை தவறாக பயன்படுத்தியுள்ளார் இயக்குனர் மணிரத்னம். அதனால் படத்தை எடுக்கும் முன்பு உரிய ஆராய்ச்சி மேற்கொண்டிருக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

ps1

மேலும் வரலாற்றில் உள்ள உண்மை பெயர்களை, தனது கதாபாத்திரங்களுக்கு கல்கி பயன்படுத்தியுள்ளார். ஆனால் போர் தந்திரங்களில் சிறந்து விளங்கிய சோழர்களுக்கு அவமதிப்பு செய்யும் வகையில் வரலாற்றை திரித்து மணிரத்னம் படம் எடுத்துள்ளார். இது குறித்து மத்திய அரசு மற்றும் இந்திய தொல்லியல் துறை ஆகியவற்றில் அளித்துள்ள புகாரை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. 

 

 

Share this story