ஓடிடியில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’... ஆர்வமாக பார்க்கும் ரசிகர்கள் !

ps

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது. 

வரலாற்று நாவலான ‘பொன்னியின் செல்வன்’ பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகி வெளியானது. கடந்த மாதம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் வெளியான இப்படத்தை மணிரத்னம் இயக்கியிருந்தார். இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா இணைந்து தயாரித்துள்ளது.  

இந்தப் படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம், சோபிதா துலிபாலா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயசித்ரா, ரஹ்மான், விக்ரம் பிரபு,அஸ்வின் காக்கமனு, லால், பார்த்திபன், ரியாஸ் கான், மோகன்ராமன், அர்ஜுன் சிதம்பரம், பாபு ஆண்டனி என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். 

ps

பான் இந்தியா திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் இப்படம் வெளியானது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் பிரம்மாண்ட காட்சி அமைப்புகள் இல்லை, கிராபிக்ஸ் பெரிய அளவில் பயன்படுத்தப்படவில்லை. இருப்பினும் இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

தற்போது திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் 500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இப்படம் இன்று அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

Share this story