‘சிவோஹம்’... ‘பொன்னியின் செல்வன் 2’ லிரிக்கல் பாடல் வெளியீடு !

Shivoham

‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் இருந்து ‘சிவோஹம்’ லிரிக்கல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் மிகப்பெரிய நாவலான ‘பொன்னியின் செல்வன்’ தற்போது திரைப்படமாக உருவாகியுள்ளது. மணிரத்னத்தின் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியானது. இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் பாகம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, சரத்குமார், பார்த்திபன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 

இந்த படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள ‘சிவோஹேம்’ என்ற வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலை சத்யபிரகாஷ், நாராயணன் உள்ளிட்டோர் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story