குத்துச் சண்டை பயிற்சியில் பூஜா ஹெக்டே... ஆக்‌ஷன் படத்திற்கு தயார்...

குத்துச் சண்டை பயிற்சியில் பூஜா ஹெக்டே... ஆக்‌ஷன் படத்திற்கு தயார்...

பிரபல நடிகை பூஜா ஹெக்டே, தான் நடிக்க இருக்கும் அடுத்த படத்திற்காக, குத்துச் சண்டை பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். 

தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன் பிறகு அவருக்கு தமிழில் அதிக வாய்ப்புகள் வரவில்லை. அதனால், இந்தி, தெலுங்கு திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார். இந்தியில், ஹிருத்திக் ரோஷன் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் இணைந்து அவர் நடித்த அலவைக்குந்தபுரமுலோ திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்ததை தொடர்ந்து, அவருக்கு மீண்டும் தமிழில் வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

குத்துச் சண்டை பயிற்சியில் பூஜா ஹெக்டே... ஆக்‌ஷன் படத்திற்கு தயார்...

அதன்படி, பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து மீண்டும் கோலிவுட்டுக்கு ரீஎன்ட்ரி கொடுத்தார். அதை தொடர்ந்து இந்தியிலும் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில், பாலிவுட்டில் அவர் அடுத்ததாக நடிக்க உள்ள ஆக்‌ஷன் திரைப்படத்திற்காக குத்துச் சண்டை மற்றும் தற்காப்புக் கலை பயிற்சியில் பூஜா ஹெக்டே ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

Share this story