பூஜா ஹெக்டேவை சர்ப்ரைஸ் செய்த சூர்யா படக்குழு

pooja

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்னும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இப்படம் சூர்யாவின் 44வது படமாக உருவாகி வருவதால் தற்காலிகமாக ‘சூர்யா 44’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஸ்டோன் பெஞ்ச் மற்றும் சூர்யாவின் 2டி நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் கார்த்திக் சுப்பராஜின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.  


இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் அந்தமானில் தொடங்கியது. அதை தொடர்ந்து ஜூலையில் சூர்யாவின் பிறந்தநாளன்று(23.07.2024) அவருக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு வெளியிட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்ற போது, சூர்யாவுக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது. அதன் பின்பு அவர் குணமாகி கொச்சியில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்தார். 

இந்நிலையில் பூஜா ஹெக்டே, அவரது இஸ்டாகிராம் ஸ்டோரியில், சூர்யா 44 படக்குழு தனக்கு கேக் வெட்டி நன்றி தெரிவித்துள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் படக்குழுவுக்கு தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Share this story