'சூர்யா 44' படம் குறித்து நடிகை பூஜா ஹெக்டே அப்டேட்!
சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி கங்குவா எனும் திரைப்படம் திரைக்கு வந்தது. சிறுத்தை சிவா இயக்கியிருந்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதே சமயம் நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44 என்ற தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இவர்களுடன் இணைந்து ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.
விரைவில் இந்த படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த படமானது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திரைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூர்யா 44 படம் குறித்த தகவலை வீடியோ ஒன்றின் மூலம் பகிர்ந்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, “கார்த்திக் சுப்பராஜ் ஒரு காதல் கதையை எழுதி இருக்கிறார் என்றால் அது எப்படி இருக்கும்? அதுதான் சூர்யா 44” என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். எனவே சூர்யா 44 படமானது காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் நிலையில் அந்த படம் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டைலில் இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது. அடுத்தது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது