'பூஜா- ஜான் கொக்கன்' ஜோடிக்கு குழந்தை பிறந்தாச்சு – என்ன குழந்தை தெரியுமா?

photo

நடிகை பூஜா ராமசந்திரன் கர்பமாக இருந்த நிலையில் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனை தனது சமூகவலைதளபக்கத்தில் வெளியிட்டு மகிழ்சியை பகிர்ந்துள்ளார்.

photo

தொகுப்பாளராக தனது வாழ்கையை துவங்கி வெள்ளிதிரையில் குணச்சித்திர நடிகையாக வலம் வந்தவர் நடிகை பூஜா. இவர்தனதுசக விஜே க்ரெய்க்கை 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால்  இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். தொடர்ந்து ஜான் கொக்கனுடன் திருமணம் நடந்தது. இவரும் திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர்.  மலையாள நடிகரான ஜான் கொக்கன்  பாகுபலி, சார்பட்டா பரம்பரை, துணிவு உள்ளிட்ட படங்களில் மக்கள் பாராட்டும் படியான நடிப்பை வழங்கியவர்.

photo

இந்த நிலையில் சமீபத்தில் பூஜா கர்பமாக இருப்பதை அறிவித்து பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தொடர்ந்து அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை குழந்தையின் கைகள், ஜான் மற்றும் பூஜா கரங்களை வைத்து புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார். தொடர்ந்து பலரும் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

Share this story