குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு பெயரை அறிவித்த நடிகை பூர்ணா.

photo

நடிகை பூர்ணாவுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்த நிலையில் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு பெயரையும் அறிவித்துள்ளார் நடிகை பூர்ணா.

photo

கேரளாவை சேர்ந்தவர் நடிகை பூர்ணா, இவர் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் அண்டுபடத்தின் மூலமாக கதாநாயகியாக   தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானார். தொடர்ந்து வேலூர் மாவட்டம், வித்தகன், தகராறு, சவரக்கத்தி, தலைவி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதிலும் இவர் நடித்த தலைவி படம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக்காக எடுக்கப்பட்டது. அதில் இவர் ஜெ-யின் நெருங்கியத் தோழியான சசிகலாவாக நடித்திருந்தார். இதற்காக அவர் பல மிரட்டல்களை சந்தித்தும் துணிச்சலாக கதாப்பாத்திரத்தில் நடித்து  அசத்தினார்.

photo

தொடர்ந்து துபாய் தொழிலதிபர் ஆசி அலி என்பவரை காதலித்து திருமனம் செய்துகொண்டார். அடுத்ததாக கர்பகால புகைப்படங்கள், வளைகாப்பு புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிட்டார். இந்த நிலையில்  சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்ததாக அறிவித்து மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். தற்போது குழந்தையின் புகைப்படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டு குழந்தையின் பெயரையும் அறிவித்துள்ளார். அதாவது குழந்தைக்கு “ஹாம்டன்” என பெயரிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

Share this story