இனி சாதாரண பூர்ணா இல்ல; கோடீஸ்வரி பூர்ணா- 'கண்ணா லட்டு தின்ன ஆசையா'!....

photos

நடிகை பூர்ணாவிற்கு சமீபத்தில் துபாயில்  திருமணம் நடந்தது, பலருமே அந்த தம்பதிக்கு  வாழ்த்து தெரிவித்தனர். தற்பொழுது நடிகை பூர்ணாவிற்கு அவரது கணவர் திருமண பரிசாக சொகுசு பங்களா, கார், தங்க வைர நகைகளை வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

photos

தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் பிரபல நடிகையான பூர்ணா; தமிழில் அறிமுகமானது பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலமாக தான். அதன்பிறகு கந்தக்கோட்டை, ஆடு புலி, வித்தகன், கொடிவீரன், காப்பான், தலைவி, லாக்கப் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

photos

இவருக்கு கடந்த மே மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் , ஜூன் மாதம் 12- ஆம் தேதி துபாயில் திருமணம் நடைபெற்றது. அவரின் திருமண புகைப்படத்தை பகிர்ந்து திருமணம் குறித்தும் மணமகனான ஆஷிஃப் அலி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜெபிஎஸ் குரூப் என்ற நிறுவனத்தின் சிஇஓ.வாக இருக்கிறார் என்று கூறியிருந்தார்.

photos

இந்த நிலையில் மனைவி பூர்ணாவிற்கு கணவர் ஆஷிஃப் அலி கொடுத்த அன்பு பரிசு குறித்த தகவல் வெளியாகி பலரையும் வாய் பிளக்க வைத்துள்ளது. அதாவது பல கோடியில் பரிசு பொருளை திருமண பரிசாக கொடுத்துள்ளாராம், 2700 கிராமில் தங்கம் மற்றும் வைர நகைகளை பரிசாக கொடுத்துள்ளாராம் அதில்  தங்க நகையின் மதிப்பு மட்டும் சுமார்  ரூ.1.30 கோடி என கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், ரூ.25 கோடி மதிப்பிலான ஆடம்பர  பங்களாவையும் பரிசாக  கொடுத்துளாராம். பரிசின் மொத்த மதிப்பு ரூ.30 கோடியாம். இதை கேட்டு பலருமே’ இனி நீங்க சாதாரண பூர்ணா இல்ல, கோடீஸ்வரி பூர்ணா’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

photos

Share this story