பூர்ணிமா நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர்
1705931106131

18 போட்டியாளர்களுள் ஒருவராக களமிறங்கிய பூர்ணிமா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். சில சமயங்களில் அவரது செயல்கள் பார்வையாளர்களை எரிச்சலடைய செய்தது அவரை வைத்து நிறைய மீம்ஸ்களும் சமூகவலைதளங்களில் பரவியது. இந்த நிலையில் 50 நாள்களுக்கு முன்பே வீட்டை விட்டு சென்றுவிடுவார் என நினைத்த நிலையில் 95 நாள்கள் பிக்பாஸ் வீட்டில் தாக்குபிடித்து 16லட்சம் பணத்தும் வெளியேறினார். அவர் நிகழ்ச்சிக்கு முன்பாகவே நடித்த அன்னபூரணி திரைப்படம் வெளியானது. இதையடுத்து, அவர் நாயகியாக நடித்த செவப்பி என்ற படமும் வௌியானது.
தற்போது அவரது நடிப்பில் இரண்டாவது படம் உருவாகி வருகிறது. ஹரி மகாதேவன் என்பவர் இயக்க, கோவை பிலிம் பேக்டரி நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில் படத்தின் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.