‘சந்திரமுகி 2’ படத்தின் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய பிரபல டிஜிட்டல் தளம்.

photo

கடந்த 2005-ம் ஆண்டு இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ரஜினி, பிரபு,ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'சந்திரமுகி'. இந்த படம் நாட்கள் திரையரங்குகளில் ஓடிய திரைப்படம் என்ற பெருமையையும், அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையையும் படம் பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

photo

சமீபத்தில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், இந்த பாகத்தையும்  பி.வாசு தான் இயக்குகிறார். படத்தை, லைகா நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். கதாநாயகியாக இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் இணைந்துள்ளார். இவர்களூடன் வைகைப்புயல் வடிவேலு நடித்துள்ளார்.

photo

தற்போது இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் தளம் கைப்பற்றியுள்ளது. அதற்கான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story