அமலாக்கத்துறை சோதனையில் சிக்கும் பிரபல நடிகர்கள்...!

actors

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தொடர்பான வழக்கில் அவர் தயாரிக்கும் பட கதாநாயகர்கள் வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

டான் பிக்சர்ஸ் நிறுவனரான ஆகாஷ் பாஸ்கரன் இட்லி கடை, பராசக்தி, சிம்பு - 49, இதயம் முரளி உள்ளிட்ட படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறார். ஒவ்வொரு படமாகத் தயாரித்து லாபம் கிடைக்கும் பட்சத்தில் அடுத்த படத்தைத் தயாரிப்பதுதான் வழக்கமானது.
ஆனால், வரும்போதே பிரம்மாண்டமாக அடுத்தடுத்து நட்சத்திர நடிகர்களை ஒப்பந்தம் செய்து தமிழ் சினிமாவில் சலசலப்பை ஏற்படுத்தியவர் ஆகாஷ் பாஸ்கரன்.

akash
இந்த நிலையில், சில நாள்களுக்கு முன் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் சோதனை செய்த அமலாக்கத்துறையினர் முக்கியமான ஆவணங்களைக் கைப்பற்றியதாகவும் அதில் நடிகர் தனுஷுக்கு இட்லி கடை படத்தை இயக்கி, நடிக்க ரூ. 40 கோடியும், சிவகார்த்திகேயனுக்கு முன்பணமாக ரூ. 25 கோடியையும் சிம்புவுக்கு முன்தொகையாக ரூ. 15 கோடியும் ஆகாஷ் கொடுத்ததாக் கூறப்படுகிறது.

akash
மேலும், சட்டவிரோத பணமாற்றம் மற்றும் முதலீடு செய்திருக்கலாம் என அமலாக்கத்துறையினர் சந்தேகப்பட்டதால் ஆகாஷ் பாஸ்கரனை விசாரிக்க சம்மன் அனுப்பினர். இன்று ஆஜராக வேண்டிய ஆகாஷ் இன்னும் ஆஜராகவில்லை. இதனால், அவர் எங்கிருக்கிறார் என்கிற விசாரணையைத் துவங்கியுள்ளனராம்.
இதற்கிடையே, நடிகர்கள் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this story