சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்த பிரபல நடிகை..!

குழந்தை பிறந்த நிலையில் சினிமாவை விட்டு விலகுவதாக இந்திய கிரிக்கெட் வீரரின் மனைவியும் பிரபல நடிகையுமான அதியா ஷெட்டி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி மற்றும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே.எல்.ராகுல் இருவரும் தங்களது காதலை ரகசியமாக வைத்திருந்தனர். கடந்த 2019 ஆம் ஆண்டு இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. பின்னர், 2021 ஆம் ஆண்டு கே.எல்.ராகுல் தனது இன்ஸ்டாகிராமில் அதியாவுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து தங்களது உறவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதையடுத்து பல கிரிக்கெட் தொடர்களில் ஒன்றாக கலந்துகொண்டுள்ள இந்த ஜோடி, தங்கள் குடும்பத்தினர் சம்மதத்துடன் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரியில் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்தின்போது சுனில் ஷெட்டி தனது மகளுக்கு திருமண பரிசாக மும்பையில் 50 கோடி மதிப்பிலான பிளாட் ஒன்றை கொடுத்தார்.
இதற்கிடையே, தனது மகளும் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலின் மனைவியுமான அதியா திரைத்துறையில் இருந்து விலகுவதாக பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி அறிவித்துள்ளார். கே.எல்.ராகுலுக்கும் அதியா ஷெட்டிக்கும் அண்மையில் பெண் குழந்தை பிறந்தது.இந்த நிலையில், தாய்மை என்ற புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளதால் இனி திரைப்படங்களில் நடிக்க விரும்பவில்லை என மகள் அதியா கூறிவிட்டதாக சுனில் தெரிவித்துள்ளார். "ஹீரோ", "முபாரகன்", "மோதிச்சூர் சக்னாச்சூர்" ஆகிய 3 படங்களில் மட்டும் அதியா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.