'ஜனநாயகன்' படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்...!

vijay

நடிகர் விஜய் நடித்துள்ள  ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையை  அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். உச்சநட்சத்திரமாக திகழும் நடிகர் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் தமிழக வெற்றிக்கழகம் கட்சியைத் தொடங்கிய பிறகு அவர் இரண்டு படங்களில் மட்டுமே நடிப்பதாக அறிவிப்பை வௌியிட்டார். அவரது நடிப்பில் அவருடைய 68வது படமாக  தி கோட் படம் வரும் வெளியானது. இதையடுத்து, அவருடைய கடைசி படமாக  இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில்  ‘ஜனநாயகன்’ படம் உருவாகி வருகிறது. இதனால்  அந்த படம் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  ஜனநாயகம் படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

vijay
 

இந்த நிலையில், தற்போது அதே அமேசான் பிரைம் நிறுவனம் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை 121 கோடி ரூபாய்க்கு வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.  மேலும், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை அமேசான் நிறுவனம் வாங்கியிருந்தாலும், எட்டு வாரங்கள் கழித்து மட்டுமே ஓடிடியில் வெளியிட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story

News Hub