காதலரை கரம் பிடிக்கும் பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ரவீனா!

raveena

காதலர் தேவன் ஜெயக்குமாரை விரைவில் திருமணம் செய்யவுள்ளார் ரவீனா ரவி. தமிழில் முன்னணி டப்பிங் கலைஞராக வலம் வருபவர் ரவீனா. டப்பிங் கலைஞராக மட்டுமன்றி ‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘லவ் டுடே’, ‘மாமன்னன்’ உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். இவருடைய அம்மா ஸ்ரீஜா ரவி தென்னிந்திய திரையுலகின் முன்னணி டப்பிங் கலைஞர் என்பது நினைவுக் கூரத்தக்கது.raveena

சமீபத்தில் மலையாளத்தில் முழுக்க நாய்களைக் கொண்டு ‘வாலாட்டி’ என்ற படம் வெளியானது. இதனை எழுதி இயக்கி இருந்தார் தேவன் ஜெயக்குமார். இதில் அமலு என்ற நாய்க்கு டப்பிங் குரல் கொடுத்திருந்தார் ரவீனா. இந்தப் பணியின் போது தான் தேவன் ஜெயக்குமாருக்கும், ரவீனாவுக்கும் காதல் மலர்ந்துள்ளது.

இருவரும் காதலித்து வருவதை தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். திருமணம் எப்போது உள்ளிட்ட விவரங்கள் எதையும் தெரிவிக்கவில்லை. இருவருக்குமே பல்வேறு திரையுலகினர் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

Share this story