சர்ச்சையில் சிக்கிய பிரபல பாடகி சித்ரா
சின்னக்குயில் சித்ரா என்று அன்பால் அழைக்கப்படும் கே.எஸ்.சித்ரா தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 25,000க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். அதேபோல, தமிழ் மட்டுமன்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஒடியா, பெங்காளி, பஞ்சாபி, குஜராத்தி, துளு, ராஜஸ்தானி, உருது சான்ஸ்கிரிட் மற்றும் படுகா என அனைத்து மொழிகளிலும் அவர் பாடல்கள் பாடி உள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக சித்ரா பகிர்ந்த வீடியோ ஒன்று இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதில், அயோத்தியில் ராமர் பிரதிஷ்டை செய்யும் அன்று, வீடு முழுவதும் திருக்கார்த்திகை போல தீபம் ஏற்ற வேண்டும். ராம மந்திரத்தை ஜெபிக்க வேண்டும் எனவும் அவர் பதிவிட்டிருந்தார். இதற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.