BREAKING : காமெடி நடிகர் மயில்சாமி திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம் !

mayilsamy

 பிரபல காமெடி நடிகர் மயில்சாமி மாரடைப்பால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருந்தவர் மயில்சாமி. பன்முக திறமைக்கொண்ட அவர் மிமிக்ரி ஆர்வத்தால் சினிமாவிற்குள் நுழைந்தார். பல முன்னணி நடிகர்களை போல் தத்ரூபமாக பேசக்கூடியவர். 1984-ஆம் ஆண்டு சினிமாவில் அடியெடித்து வைத்த அவர், சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். 

mayilsamy

முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், விக்ரம் உள்ளிட்ட நடிகர்களின் படங்களின் நடித்துள்ளார். குறிப்பாக சுந்தர் சியின் ‘தலைநகரம்‘ படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடித்த காமெடி இன்றைக்கும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோன்று ‘தூள்’ படத்தில் விவேக்குடன் இணைந்து ‘லட்டு’ காமெடி காட்சியில் நடித்தார். இப்படி 100-க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 

சினிமாவை தவிர டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். சமூக சிந்தனை கொண்ட அவர், ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர். இந்நிலையில் சிவராந்திரியை முன்னிட்டு சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயில் ஒன்றில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நடிகர் மயில்சாமியின் மறைவு திரையுலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வாணி ஜெயராம், டி.பி.விஸ்வநாத், டிபி கஜேந்திரன் என அடுத்தடுத்து சமீபத்தில் மரணமடைந்தனர். தற்போது மயில்சாமி மரண செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Share this story