ரஜினி படத்தில் இணைந்தார் ராணா டகுபதி
1696323680220

ரஜினிகாந்தின் 170-வது திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதி இணைந்துள்ளார்
ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் இருக்கும் படம் தலைவர் 170 . ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ ஞானவேல் இந்தப் படத்தை இயக்குகிறார். லைகா புரோடக்ஷன்ஸ்ச் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. இந்நிலையில் தலைவர் 170 படத்தின் படக்குழுவினரை வரிசையாக லைகா நிறுவனம் அறிவித்து வருகிறது.
அதன்படி, படத்திற்கு இசை அமைக்கும் அனிருத் மற்றும் ரித்திகா சிங், மஞ்சு வாரியார், துஷாரா விஜயன் உள்ளிட்ட மூன்று கதாநாயகிகளை படக்குழு அறிமுகப்படுத்தியது. அதை தொடர்ந்து, தற்போது படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதி இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.