பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்ற தக் லைஃப்

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் 'தக் லைப்'. கேங்க்ஸ்டர் கதைக்களத்தில் ஆக்ஷன் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் கமல்ஹாசனின் 234வது படமாகும் .இந்த படத்தில் சிலம்பரசன், திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், அலி பசல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இன்று வெளியான கமல் நடித்த தக் லைஃப் படத்தை படத்தை ரசிகர்கள் ஆவலுடன் பார்த்து வருகின்றனர்
38 வருடங்களுக்கு பிறகு மணிரத்னம் - கமல்ஹாசன் மீண்டும் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. இப்படத்தில் சிம்பு நடித்துள்ளதால் அவரின் ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். இப்படம் தொடர்பான டிரெய்லர், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
அனைத்து மொழிகளிலும் படம் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் காலை முதலே ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். இன்று ஒரு நாள் மட்டும் காலை காட்சி 9-க்கு தொடங்கி இறுதிக்காட்சி இரவு 2 வரை மொத்தம் ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு காட்சிகளை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் படம் குறித்த பாசிட்டிவ் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.