‘போத்தனூர் தபால் நிலையம் 2’ ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு
பேஷன் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாகியுள்ள “போத்தனூர் தபால் நிலையம் பாகம் 2” படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
பீரவீன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘போத்தனூர் தபால் நிலையம்’. வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இப்படம் மூன்று பாகங்களாக தயாராக உள்ளது. இப்படத்தில் முழுக்க முழுக்க புதுமுக நடிகர்களே நடித்துள்ளனர். தென்மா இசையமைத்துள்ள இப்படத்திற்கு சுகுமாரன் சுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பேஷன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தபால் நிலையத்தில் நடக்கும் த்ரில்லிங்கான சம்பவங்களை வைத்து உருவாகி உள்ளது. முதல் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்ட ஜனவரி துவங்கவுள்ளது. குறுகிய காலத்தில் எடுக்கப்பட திட்டமிடப்பட்டுள்ள இப்படம் சம்மரில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

நேற்று இப்படத்தின் முதல் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் முதல் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் 70-களில் வரும் போலீஸ் ஒருவர் துப்பாக்கியுடன் இருப்பது போன்று உள்ளது. விரைவில் ரிலீசுக்கு தயாராகி வரும் இப்படத்தின் அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

