பவர் ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

power star

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘ஐ’, ‘ஒன்பதுல குரு ’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் காமெடி நடிகராக நடித்து ரசிககள் மத்தியில் பிரபலமானவர் பவர் ஸ்டார் சீனிவாசன். தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் இந்தாண்டு இவர் நடிப்பில் இன்னும் ஒரு படம் கூட வெளியாகவில்லை. திரைப்படங்களைத் தாண்டி அரசியலிலும் ஈடுபட்டுள்ளார். மேலும் தொழிலதிபராகவும் வலம் வருகிறார். 

இந்த நிலையில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிறுநீரக கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஒரு வாரம் சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.    

Share this story