பிரபல நடிகைக்கு விருந்து கொடுத்த பிரபாஸ் -யாருக்கு தெரியுமா ?
இதுவரை பல்வேறு ஹீரோயின்களுடன் இணைத்து கிசுகிசு வெளியாகி ஓய்ந்துவிட்ட நிலையில், தற்போது பிரபாஸுடன் இணைத்து பேசப்படும் நடிகையாக மாறியுள்ளார், அவரது ஜோடியாக ‘ஃபவுஜி’ என்ற படத்தில் அறிமுகமாகும் இமான்வி. சில நாட்களுக்கு முன்பு 31வது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடிய அவருக்கு பிரபாஸ் அனுப்பிய ஒரு ஆச்சரியமான பரிசும், அதற்காக இமான்வி வெளியிட்டுள்ள ஒரு நெகிழ்ச்சியான பதிவும் இணையதளங்களை ஆக்கிரமித்துள்ளன.
அதாவது, இமான்விக்கு பல்வேறு வகையான உணவுகள் அடங்கிய சிறப்பு விருந்து அளித்து, இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் பிரபாஸ். அவர் தனக்கு அனுப்பிய அனைத்து உணவுகளின் போட்டோக்களை பகிர்ந்து, அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் இமான்வி. அந்த மேஜை பிரியாணி, புலாவ், பல்வேறு ஸ்டார்ட்டர்கள் அடங்கிய ஐதராபாத் ஸ்பஷெல் உணவுகளால் நிரம்பியிருக்கிறது.
சிக்கன் 65, சில்லி சிக்கன், சீக் ஷமி கபாப்கள், தந்துரி சிக்கன், பல்வேறு குழம்புகள், கிரேவிகள், சலான், ரெய்தா, சட்னி வகைகள், அப்ரிகாட் டிலைட், ஃபிர்னி போன்ற இனிப்பு வகைகள் இடம்பெற்றுள்ளன. ஹனு ராகவபுடி இயக்கும் ‘ஃபவுஜி’ என்ற பான் இந்தியா படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. இந்நிலையில், இமான்வியை பிரபாஸ் காதலிக்கிறாரோ என்பது போல், டோலிவுட்டில் ஒரு தகவல் பரவி வருகிறது.

