"இதனால்தான் நான் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை" -46 வயதான பிரபாஸ் பேட்டி

prabas
மாருதி இயக்கத்தில் பிரபாஸ், மாள விகா மோகனன், நிதி அகர்வால், சஞ்சய் தத், போமன் இரானி, ரித்தி குமார் நடித்துள்ள பான் இந்தியா படமான ‘தி ராஜா சாப்’, வரும் ஜனவரி 9ம்தேதி மற்ற மொழிகளிலும், ஜனவரி 10ம் தேதி தமிழிலும் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் ஆகியோர் மேடையிலேயே நின்றிருந்தனர். அப்போது ரித்தி குமார் பேசுகையில், ‘இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த பிரபாஸுக்கு நன்றி சொல்ல வேண்டியது எனது கடமை. .
இப்போது நீங்கள் கொடுத்த சேலையைத்தான் நான் அணிந்திருக்கிறேன். நீங்கள் எனது வாழ்க்கையில் கிடைத்ததற்கு மிகவும் நன்றியுள்ளவளாக இருப்பேன்’ என்று நெகிழ்ந்தார். அவர் இப்படி பேசியதை மேடைக்கு கீழே அமர்ந்து பார்த்த பிரபாஸ் சிரித்தார். உடனே ரசிகர்கள் ‘டார்லிங்’, ‘டார்லிங்’ என்று பிரபாஸை பார்த்து கூச்சலிட்டனர். 46 வயதாகும் பிரபாஸ், இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இதனால் பிரபாஸும், ரித்தி குமாரும் காதலிக்கிறார்களா என்று ரசிகர்கள் கேட்டனர். அப்போது தொகுப்பாளினி, சுவாரஸ்யமான கேள்வி ஒன்றை பிரபாஸிடம் கேட்டார். ஒரு ரசிகர், ‘பிரபாஸை திருமணம் செய்ய விரும்பினால், எப்படி இருக்க வேண்டும்?’ என்று எழுதப் பட்ட பதாகையை காட்டினார். இதே கேள்வியை அவர் பிரபாஸிடம் கேட்டார். உடனடியாக பிரபாஸ், ‘இதுநாள் வரைக்கும் அந்த உண்மை என்னஎன்று தெரியாத நிலையில்தான், இன்னும் நான் திருமணமே செய்துகொள்ளவில்லை...’ என்று பேசி கலகலக்க வைத்தார்.

Share this story