சம்பளமே வாங்காமல் 'கண்ணப்பா' படத்தில் நடித்த பிரபாஸ், மோகன்லால்?

prabhas

'கண்ணப்பா'  வருகிற ஏப்ரல் மாதம் 25ம் தேதி வெளியாக உள்ளது.

வரலாற்று புதினத்தை தழுவி உருவாகி இருக்கும் ஆன்மிக திரைப்படம் 'கண்ணப்பா'. மிகவும் பிரபலமான மகாபாரதம் தொடரை இயக்கிய பாலிவுட் இயக்குனர் முகேஷ் குமார் சிங் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி இப்படம் உருவாகி இருக்கிறது.vishnu manju

இத்திரைப்படத்தில் விஷ்ணு மஞ்சு, மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்சய் குமார், பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் வேடத்தில் நடித்துள்ளார். பிரபாஸ் ருத்ராவாகவும், மோகன்லால் கிராதாவாகவும் நடிக்கின்றனர். இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 25ம் தேதி வெளியாக உள்ளது.vishnu manju

இந்நிலையில் நேர்காண்ல் ஒன்றில் பேசிய விஷ்ணு மஞ்சு, இப்படத்தில் நடிக்க பிரபாஸ் மற்றும் மோகன்லால் இருவரும் சம்பளமே வாங்கவில்லை என்று கூறி இருக்கிறார்.

Share this story