தமிழில் தொடர் தோல்வியால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தாக பிரபாஸ் படம்

தமிழில் தொடர் தோல்வியால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தாக பிரபாஸ் படம்

கே.ஜி.எப். திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் அடுத்ததாக ‘சலார்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை ஹம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார். பிரபாஸுடன் இணைந்து மலையாள நடிகர் ப்ரித்திவிராஜ் வில்லனாகவும், ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாகவும் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என பான் இந்தியா படமாக இப்படம் வெளியாகவுள்ளது. அண்மையில் இயக்குநர் பிரசாந்த் நீல் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து படப்பிடிப்பு தளத்தின் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டது. இப்படத்தின் டீசர் கடந்த ஜூலை 6-ம் தேதி வெளியானது. அண்மையில் படத்தின் ட்ரைலரும் வெளியாகியது. 

தமிழில் தொடர் தோல்வியால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தாக பிரபாஸ் படம்

இந்தியிலும், தெலுங்கிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அளவு தமிழில் எந்த எதிர்பார்ப்பும் ஏற்படவில்லை என திரையுலகினர் தெரிவிக்கின்றனர். பிரபாஸ் நடித்து இங்கு வெளியான ராதே ஷ்யாம், சாஹோ, ஆதிபுருஷ் ஆகிய படங்கள் வெற்றி பெறாமல், தோல்வி அடைந்து நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதனால், சலார் படத்திற்கான எதிர்பார்ப்பு குறைந்துள்ளது. 

Share this story