பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' திரைப்படம்

பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' திரைப்படம்

கே.ஜி.எப். திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் அடுத்ததாக ‘சலார்’ திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தை ஹம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரித்தார். பிரபாஸுடன் இணைந்து மலையாள நடிகர் ப்ரித்திவிராஜ் வில்லனாகவும், ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு என பான் இந்தியா படமாக இப்படம் வெளியாகவுள்ளது. இதைத் தொடர்ந்து, கடந்த 22-ம் தேதி இத்திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' திரைப்படம்

இந்நிலையில், பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாருதி அப்படத்தை இயக்குகிறார். படத்திற்கு தமன் இசை அமைக்கிறார்.  மாளவிகா மோகனன், நிதி அர்வால், ரித்தி குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகிறது. 

Share this story