நடிகர் பிரபாஸ்-க்கு விரைவில் திருமணம் ?

prabas

 நடிகர் பிரபாஸ்-க்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 


தெலுங்கு பட உலகில் முன்னணி நாயகனாக வலம் வந்த பிரபாஸ், பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்பு நடிகரானார். இவர் நடிப்பில் வெளிபான் இந்திய நடிகரானார். அதன் பின் சலார், கல்கி 2898 ஏடி படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றன. பிரபாஸ் தற்போது 'ஸ்பிரிட்', 'கண்ணப்பா' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். 
45 வயதான நடிகர் பிரபாசுக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. பாகுபலி படத்தில் நடிக்கும் போது, நடிகர் பிரபாசுக்கும். அனுஷ்காவுக்கும் காதல் ஏற்பட்டதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் தகவல் வெளியானது.

prabhas

அதனை இருவருமே மறுத்து நட்பாகத்தான் பழகுகிறோம் என்று தெளிவுபடுத்தினர். இந்நிலையில் பிரபாஸின் திருமணம் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபரின் மகளை நடிகர் பிரபாஸ் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. பிரபாசின் மாமாவும் மறைந்த அரசியல்வாதியுமான கிருஷ்ணம் ராஜுவின் மனைவி சியாமளா தேவி, இந்த திருமண ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

Share this story

News Hub