பிரபுதேவாவின் 60வது படமாக உருவாகும் ‘வுல்ஃப்’... மிரட்டலான ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் !

பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள ‘வுல்ஃப்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
பிரபல நடன இயக்குனரான பிரபுதேவா நடிப்பில் உருவாகும் 60வது படம் ‘வுல்ஃப்’. இந்த படத்தில் அனுசுயா பரத்வாஜ், ராய் லக்ஷ்மி, வசிஷ்ட சிம்ஹா, ஆர்.ஜே.ரமேஷ் மற்றும் அஞ்சு குரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அம்ரேஷ் கணேஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தை ‘சிண்ட்ரெல்லா’ படத்தை இயக்கிய வினு வெங்கடேஷ் என்பவர் இயக்கி வருகிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான சந்தேஷ் புரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி, சென்னை, பெங்களூரு, அந்தமான் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ளது. கதாநாயகன் மற்றும் வில்லன் ஆகிய இருவரும் ஓநாயின் குணாதிசயங்களை கொண்டிருப்பார்கள். எந்த ஓநாய் வெற்றி பெறுகிறது என்பதான் இப்படத்தின் கதையாகும். இந்த படம் வரலாற்று காலத்திலிருந்து தற்காலம் வரை பயணிக்கும். அறிவியல் புனைக்கதை படமாக உருவாகி வரும் இப்படம் திகில் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த படமாகும்.
தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் இப்படம் வரும் மார்ச் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வித்தியாசமான ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஓநாய்கள் நடுவில் பிரபுதேவா இருப்பது இருக்கிறது. இந்த போஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது.
Here's the First Look and Motion Poster of my film #WOLF
— Prabhudheva (@PDdancing) February 3, 2023
Written and Directed by @vinoo_venketesh
@sandeshproductions @imsimhaa @anjutk10 @itsme_anasuya @iamraailaxmi #ShreeGopika @rameshthilak #Amrish @vincentarul @editorkishore @manimozhianramadurai @onlynikil #nm pic.twitter.com/KHWjy6oEo5