மொட்டை கெட்டப்பில் கலக்கும் பிரபுதேவா... ‘பஹிரா’ டிரெய்லர் குறித்த அறிவிப்பு !

Bagheera

பிரபுதேவாவின் ‘பஹிரா’ படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவாவின் வித்தியாசமான நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பஹிரா’. இந்த படத்தில் 10-க்கும் மேற்பட்ட வித்தியாசமான கெட்டப்புகளில் பிரபுதேவா நடித்துள்ளார். பெண்களை காதலில் விழ வைக்க, சைக்கோவாக மாறி பல கொலை செய்யும் கொலைக்காரன் என சைக்கோ திரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. 

Bagheera

இப்படத்தில் அமைரா தஸ்தூர், சோனியா அகர்வால், சஞ்சிதா ஷெட்டி, சாக்ஷி அகர்வால், ஜனனி ஐயர், காயத்ரி என 6 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கணேசன் இசையமைத்துள்ளார். பரதன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் கடந்த ஆகஸ்ட் மாதமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில நிர்வாக காரணங்களால்  இந்த படம் இன்னும் வெளியாகவில்லை.

Bagheera

தற்போது இப்படம் மார்ச் 3-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா வரும் பிப்ரவரி 25-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபுதேவா பல கெட்டப்புகளில் இந்த படத்தில் நடித்துள்ளதால் டிரெய்லருக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

Share this story