அடால்ட் காமெடியில் ‘பஹிரா’.. ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு !

பிரபுதேவாவின் ‘பஹிரா’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது.
நடிகர் பிரபுதேவா மிரட்டலான பல கெட்டப்புகளில் நடித்துள்ள ‘பஹிரா’ திரைப்படம் வரும் மார்ச் 3-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக அமைரா தஸ்தூர், சோனியா அகர்வால், சஞ்சிதா ஷெட்டி, சாக்ஷி அகர்வால், ஜனனி ஐயர், காயத்ரி என 6 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.
பரதன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். பெண்களை காதலில் விழ வைக்க, சைக்கோவாக மாறி பல கொலை செய்யும் கொலைக்காரன் என சைக்கோ திரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கணேசன் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி ஒற்றை படக்குழு வெளியிட்டுள்ளது. முழுக்க அடால்ட் காட்சியாக உருவாகியுள்ள இந்த காட்சி வரவேற்பை பெற்றுள்ளது.