பல கெட்டப்புகளில் நடித்துள்ள பிரபுதேவா... ‘பஹிரா’ இரண்டாவது டிரெய்லர் வெளியீடு !

BagheeraTrailer

 பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள ‘பஹிரா’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

தென்னிந்தியாவில் பிரபல நடன இயக்குனராகவும், நடிகராகவும் இருப்பவர் பிரபுதேவா. அவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘பஹிரா’. பரதன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். 

BagheeraTrailer

இந்த படத்தில் 10-க்கும் மேற்பட்ட வித்தியாசமான கெட்டப்புகளில் பிரபுதேவா நடித்துள்ளார். அதனால் பிரபுதேவாவிற்கு ஜோடியாக அமைரா தஸ்தூர், சோனியா அகர்வால், சஞ்சிதா ஷெட்டி, சாக்ஷி அகர்வால், ஜனனி ஐயர், காயத்ரி என 6 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். பெண்களை காதலில் விழ வைக்க, சைக்கோவாக மாறும் பஹிராவின் கதைதான் இந்த படம். 

BagheeraTrailer

இப்படத்திற்கு கணேசன் இசையமைத்துள்ளார்.  கடந்த ஆண்டே வெளியாகவிருந்த இந்த படம் சில காரணங்களால் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்படம் வரும் மார்ச் 3-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல் டிரெய்லர் வெளியான நிலையில் இது இரண்டாவது டிரெய்லாகும். இந்த டிரெய்லர் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. 

Share this story