பிரபு தேவா நடித்த `பேட்ட ராப்' - ரிலீஸ் தேதி அறிவிப்பு

petta rap
தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும், நடன இயக்குநராகவும் வலம் வருபவர் பிரபு தேவா. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியானது பகீரா திரைப்படம். இதனையடுத்து விஜய் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருக்கும் புதிய திரைப்படம் தான் பேட்ட ராப். படத்தில் நாயகியாக வேதிகா நடித்துள்ளார். புளூ ஹில் பிலிம்ஸ் தயாரிப்பில் இத்திரைப்படத்திற்கு டி இமான் இசை அமைத்துள்ளார். விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ஆடியோ உரிமையை பிரபல நிறுவனமான டிசீரிஸ் கைப்பற்றி இருக்கிறது. மேலும், படத்தில் சுமார் 10 பாடல்கள் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.படத்தின் பாடல்கள் சில மாதங்களுக்கு முன் வெளியானது. படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தற்பொழுது படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

Share this story