கோடை ரிலீசுக்கு தயாராகும் பிரபுதேவாவின் ‘முசாசி’... விரைவில் வெளியாகும் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் !

musasi

பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் ‘முசாசி’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘முசாசி’. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படததில் பிரபல நடன இயக்குனராக பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ளார். ந்த படத்தை ஜாய் ஃபிலிம் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்து வருகிறது.

musasi

இந்த படத்தில் மாஸ்டர் மகேந்திரன், ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியன், தங்கதுரை, மலையாள நடிகை லியோனா லிஷோய், அருள்தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்துள்ளார். முழு நீள ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

musasi

இந்நிலையில் கோடை விடுமுறைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள இந்த படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது.  லியாண்டர் லீ மார்ட்டி இசையில் உருவாகியுள்ள இந்த முதல் பாடலை பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் பாடியிருக்கிறார். சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story