90 நிமிடங்கள் பிணமாக நடித்துள்ள ‘பிரபுதேவா’- சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த இயக்குநர்.

பிரபுதேவா

நடன இயக்குநரும், நடிகருமான பிரபுதேவா தனது படத்தில் கிட்டத்தட்ட 90நிமிடங்கள் பிணமாக நடித்துள்ளதாக சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார் இயக்குநர் சக்தி சிதம்பரம்.

பிரபுதேவா

சார்லி சாப்ளின், சார்லி சாப்ளின்2 என பிரபுதேவாவை வைத்து இரண்டு படங்களை இயக்கிய இயக்குநர் சக்தி சிதம்பரம் அவருடன் மூன்றாவது முறையாக கூட்டணி வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். பெயரிடப்படாத அந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து ஒய்.ஜி மகேந்திரன், யோகிபாபு, யாஷிகா ஆனந்த் நரேன் என பலரும் நடித்துள்ளனர். இந்த நிலையில் படம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார் இயக்குநர்.

அதாவது படத்தில் ‘ பிரபுதேவா கிட்டதட்ட 90 நிமிடங்கள் பிணமாக நடித்துள்ளார். இதற்கு முன்னர் நாகேஷ் மகளிர் மட்டும் படத்தில் 15 நிமிடங்கள் பிணமாக நடித்துள்ளார். குறிப்பாக பிரபுதேவா கிளைமேக்ஸ் காட்சியில் மூச்சுகூட விடாமல் நடித்து அசத்தியுள்ளார்’ என செம தகவலை பகிர்ந்துள்ளார்.

Share this story