இறுகப்பற்று திரைப்படத்தை பாராட்டிய பிரபுதேவா
'மாயா', 'மாநகரம்', 'மான்ஸ்டர்' மற்றும் 'டாணாக்காரன்' உள்ளிட்ட படங்களை தயாரித்த பொடன்ஷியல் ஸ்டூடியோவின் அடுத்த தயாரிப்பு ‘இறுகப்பற்று’. யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்குகிறார். விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களஇல் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். கார்த்திக் நேதா பாடல் வரிகளை எழுதியுள்ளார். இத்திரைப்படம் கடந்த அக்டோபர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியான நாள் முதலே நல்ல வரவேற்பை பெற்றது. அண்மையில் ஓடிடி தளத்திலும் இத்திரைப்படம் வெளியானது.
Irugapatru beautiful movie , actors brilliant , technician brilliant , dir Yuvraj dayalan superb , writing superb , producer 👍👍, ❤️❤️❤️ pic.twitter.com/9Z5oS2cHyT
— Prabhudheva (@PDdancing) November 22, 2023
இந்நிலையில், இப்படத்தை பார்த்த நடிகரும், இயக்குநருமான பிரபுதேவா படக்குழுவை பாராட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி, அனைவரின் நடிப்பும் அருமையாக உள்ளதாகவும், நல்ல கதைக்களம் என்றும் இயக்குர் யுவராஜையும் பாராட்டி குறிப்பிட்டுள்ளார்