‘பொய்க்கால் குதிரை’ ஜெயித்ததா ?.. தோற்றதா ?.. விமர்சனம் இங்கே

பிரபுதேவாவின் ‘பொய்க்கால் குதிரை’ படத்தின் எப்படி இருக்கிறது என்ற விமர்சனத்தை பார்ப்போம்.
படத்தோட டைட்டிலுக்கும்,ஸ்டோரிக்கும் துளி கூட சம்பந்தமில்லை! ஆக்சிடெண்ட்ல ஒரு காலை இழந்த பிரபுதேவாவுக்கு, அவரது குட்டி மகள்தான் உலகம். அந்தக் குழந்தைக்கு விசித்திரமான நோய்.அதை சரி பண்ணனும்னா எழுபது லச்ச ரூவாய் இருந்தாதான் முடியும்னு ஹாஸ்பிடல் இன்சார்ஜ் சொல்றார்.
அதுக்கான முயற்சியில் இருக்கும் பிரபுதேவா,எப்ப ஹாஸ்பிடலுக்கு வந்தாலும் அந்த இன்சார்ஜ் குறுக்க வந்து என்னாச்சு பணம்னு விரட்டிக்கிட்டே இருக்கார்.சரி,மெடிக்கல் க்ரைம் ஸ்டோரி போலன்னு நினைச்சால்… தன்னோட மகளைக் காப்பாத்துறதுக்காக நான் எந்த லெவலுக்கு வேனாலும் போவேன்னு கிளம்பி ஒரு கோடீஸ்வர வீட்டுப் புள்ளையைக் கடத்த முயற்சி செய்கிறார்.அதுக்கப்புறம் நடக்கிற 'ஆடுபுலி' ஆட்டம்தான் மிச்சப்படும்.
ஒத்தைக் காலோடு கெத்து காத்திருக்கிறார் பிரபுதேவா. அதிலும் 'சிங்குளு சிங்கிள்' தெறி ஆட்டம். வரலட்சுமி கார்ப்பரேட் கம்பெனி சி இ ஓவாக அட்டகாசமான ரோல். படத்துக்கு அவரது கேரக்டர் மிகப்பெரிய பலம். பிரகாஷ்ராஜ்,நடிகர் ஷாம் இருவரும் ஜஸ்ட் என்ட்ரி கொடுத்திட்டுப் போகிறார்கள்.ஒரு வேலை பார்ட் டூல ஏதாவது பெருசா இருக்குமோ என்னவோ!
கிளைமாக்ஸ் காட்சி எதிர்பாராத திருப்பம். விஷுவலாக சொல்ல வேண்டிய காட்சிகளை டயலாக்காக சொல்லியிருப்பது பெரிய ஸ்பீட் பிரேக். அட்டகாசமான த்ரில்லர் மூவியாக வந்திருக்க வேண்டிய படம்… ஜஸ்ட் மிஸ்.
- V.K.சுந்தர்