‘செம்பி’ படத்தில் சர்ச்சைக்குரிய வகையில் வாசகம் - பிரபு சாலமனிடம் வாக்குவாதம் செய்த செய்தியாளர்கள் !

sembi

‘செம்பி’ படத்தில் சர்ச்சைக்குரிய வகையில் வாசகம் இடம்பெற்றுள்ளதால் இயக்குனர் பிரபு சாலமனிடம் செய்தியாளர்கள் வாக்குவாதம் செய்தனர்.  

பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா, அஷ்வின் குமார், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘செம்பி’. இந்த படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் செய்தியாளர்களுக்காக பிரத்யேக காட்சி இன்று திரையிடப்பட்டது. அந்த படத்தின் இறுதியில் அன்பு குறித்து பைபிளில் இடம்பெறும் ஒரு வாசகத்தை பிரபு சாலமன் பதிவிட்டிள்ளார். இது மத பிரச்சாரம் செய்யும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது.  

sembi

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரபு சாலமனிடம், செம்பி கிருஸ்துவ மதப் பிரச்சாரத்தை வலியுறுத்தும் படமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இது நான் கடைப்பிடிக்கும் விஷயம். கிறிஸ்துவம் மதமே கிடையாது என்று கூறினார். 

மேலும் உங்கள் பழைய படங்களில் இதுபோன்று உள்ளதே என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கிருஸ்துவம் மதம் கிடையாது. உங்களை காயப்படுத்தியிருந்தால் மனிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார். இந்த சம்பவம் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.


 

Share this story