உண்மை சம்பவத்தின் எதிரொலி ‘ஃப்ளாஷ்பேக்’... பிரபுதேவா பட டிரெய்லரை வெளியிட்ட தனுஷ் !
பிரபுதேவா மற்றும் ரெஜினா கசாண்ட்ரா இணைந்து நடித்துள்ள ‘ஃப்ளாஷ்பேக்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார் பிரபல நடன இயக்குனரான பிரபுதேவா. அந்த வகையில் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஃப்ளாஷ்பேக்’. இந்த படத்தை ‘மகாபலிபுரம்’, ‘கொரில்லா’ ஆகிய படங்களை இயக்கிய டான் சாண்டி இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அனுசுயா, இளவரசு, உமா ரியாஸ், ஆர்யன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி.பிள்ளை தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
காதல் கதைகளம் கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்தின் டிரெய்லரை நடிகர் தனுஷ் வெளியிடப்பட்டுள்ளார். உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் நடிகர் பிரபுதேவா எழுத்தாளராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.