நடிகர் பிரபுவின் மகளுக்கும் பிரபல இயக்குநருக்கும் திருமணம்!

photo

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனான பிரபு சினிமாவில் ஹீரோவாக நடித்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவரது மகன் விக்ரம் பிரபுவும் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் பிரபுவின் மகளுக்கும் பிரபல இயக்குநருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ள தகவல் வெளியாகியுள்ளது.

photo

அந்த இயக்குநர் யார் என்றால் சமீபத்தில் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யாவை வைத்து சூப்பர் ஹிட் படமான மார்க் ஆண்டனி படத்தை கொடுத்த ஆதிக் ரவிடந்திரன் தான் அவர். இவர்கள் இருவரும் காதலித்து பின் பெற்றோர் சம்மத்துடன் திருமணம் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது திருமணம் வரும் டிசம்பர்15ஆம் தேதி நடக்க உள்ளது, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.

Share this story